இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

by Admin / 29-11-2023 09:37:05am
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார், தமிழ் திரை உலகுக்குள் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி கைதி படத்தில் தனக்கானமுத்திரையை பதித்த லோகேஷ் விஜய் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர்.விக்ரம் படத்தின் மூலமாகவும் விஜய்யின் லியோ படத்தின் மூலமாகவும் மிக அதிக அளவில் சம்பளம் பெறும் இயக்குனரில் ஒருவராக மாறினார், பொதுவாக இயக்குனர்கள் அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின் தான் இயக்கும் படம் அல்லாது பிற இயக்குனர்களை வைத்து படத்தை எடுக்கும் பட நிறுவனங்களை தொடங்குவது வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் அந்த பட்டியலுக்குள் வருகிறார்.

அவர் தற்பொழுது தான் தயாரிக்கும் முதல் படத்தை உறியடி என்னும் படத்தை இயக்கிய விஜய குமாரின் இயக்கத்தில் முதல் படத்தை தயாரிக்க உள்ளதாக அதன் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பதிவு செய்து உள்ளா.. இன்று மாலை 6 மணி அளவில் இதற்கான நிகழ்வு அரங்கேற உள்ளது..

 

Tags :

Share via