72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
குஜராத்தின் ஏக்தா நகரில் 72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் 'ஆர்டிகிள் 370' சிறந்த திரைப்படமாகவும், 'கல்கி 2898 ஏடி' சிறந்த மக்கள் விருப்பத் திரைப்படமாகவும் அங்கீகரிக்கப்பட்டன.
'சந்து சாம்பியன்' திரைப்படத்திற்காக நடிகர் கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகருக்கான விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார். நடிகர் தனுஷ், 'மெய்யழகன்' திரைப்படத்தின் பின்னணி ஒலிக்கலவைக்காக சுரேஷ், ஜி இசையமைப்பாளர் ஜீ.வி.பிரசாத் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் தேசிய விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
தமிழ், மலையாளம்,மராத்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல்முறையாக சாந்தலி மொழித் திரைப்படம் (அங்கென்) எனப் பல மொழித் திரைப்படங்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டன.
Tags :

















