சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை.

by Editor / 29-11-2023 10:48:07pm
சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை.

சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் கனமழை. இன்று அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருப்பதன் காரணமாக வீதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றனர் டி நகர், கோடம்பாக்கம் அண்ணா சாலை திருவல்லிக்கேணி வளசரவாக்கம் விருகம்பாக்கம் வடபழனி, கொளத்தூர் பெரம்பூர் புறநகர் தொகுதி என திருவொற்றியூர் பகுதிகளில் மழை நீர் வெள்ளைக்காடாக பெருக்கெடுத்து ஓடுவதோடு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அலுவலகம் சென்று திரும்பும் நிலையில் மழையின் காரணமாக வாகனங்கள் ரோடுகளில் தேங்கி நிற்பதின் காரணமாக பலத்த நெரிசல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வாகனங்களாலும் இரு சக்கர நான்கு சக்கர பேருந்துகள் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது கிண்டி கத்திபாரா ஜங்ஷனில் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் வட பழனி சிக்னல் அருகே கோயம்பேட்டிற்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்துகள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கொளத்தூர் பகுதியில் சென்னையில் பெய்த மழையில் அதிக அளவு கிட்டத்தட்ட 12 சென்டிமீட்டர் மழை பொழிந்து இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கின்ற நிலையில் பெரம்பூர் சுரங்கப்பாதைகள் மழை தண்ணீர் அதிக அளவில் தேங்கியதன் காரணமாக மூடப்பட்டு இருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அங்கங்கே தேங்கி கிடக்கும் நீரை வெளியேற்றும் முகமாக பணிகளை செய்து கொண்டிருக்கிற காட்சியையும் நாம் பார்க்க முடிகிறது நூற்றுக்கணக்கான நீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வானிலை மைய அறிவுரத்தில் படி சென்னையில் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக மழை பொழியும் என்று சொல்வதின் காரணமாக வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை

Share via