அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பொன்முடி

by Staff / 30-11-2023 01:12:43pm
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பொன்முடி

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார். 2006 - 2011 ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி வீடு மற்றும் அலுவலகங்களில் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via