சென்னையில் மழைக்கு 8 பேர் உயிரிழப்பு

by Staff / 05-12-2023 12:12:13pm
சென்னையில் மழைக்கு 8 பேர் உயிரிழப்பு

சென்னையில் மிக்ஜாம் புயல் எதிரொலியால் நேற்று பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூளைமேடு மாநகராட்சி பள்ளி பாதுகாவலர் செல்வம் என்பவர் பள்ளி வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே போல் கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண முகாமில் தங்கியிருந்த அசாம் நபரும் உயிரிழந்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் கடந்த 45 மணி நேரத்தில் மட்டும் 47 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo