சபரிமலை மண்டல பூஜை - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.

by Editor / 06-12-2023 09:11:05am
சபரிமலை மண்டல பூஜை - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. கடந்த மாதம் 16ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளனர். டிசம்பர் 27ஆம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

 

Tags : சபரிமலை மண்டல பூஜை - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.

Share via