பிரபல இயக்குனர் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி

by Staff / 14-12-2023 12:51:49pm
பிரபல இயக்குனர் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான ரா.சங்கரன் உடல்நலக்குறைவால் 92 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு நடிகர் சிவகுமார் இயக்கத்தில் 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' என்ற படத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து 7 படங்களை இயக்கிய அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். அவரது இறப்பு குறித்து இயக்குனர் பாரதி ராஜா தனது எக்ஸ் தள பதிவில் அவரின் மறைவு வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via