தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வாய்ப்பு.

by Editor / 15-12-2023 09:50:09pm
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது முதல் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை வாய்ப்பு.

Share via