குற்றாலநாதர் திருக்கோயிலில் திருவாதிரை  தேர் திருவிழா.

by Editor / 22-12-2023 01:43:52pm
குற்றாலநாதர் திருக்கோயிலில் திருவாதிரை  தேர் திருவிழா.

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த குற்றாலநாதர் திருக்கோயில் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம்  இந்த வருடமும் கடந்த  18 ஆம் தேதி அதிகாலை அன்று குற்றாலநாதர் கோயிலில்  திருவாதிரை திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது அதையடுத்து ஐந்தாம் நாளான இன்று மேளதாளங்கள் முழங்க  தேர் திருவிழா நடைபெற்றது இந்த தேர் திருவிழாவில் மொத்தம் 5 தேர்கள் சன்னதியை சுற்றி வரும் முதலில் விநாயகர் தேரும் பின்னர் முருகர் , நடராஜர், மற்றும் சுவாமி ,அம்பாள்  ஆக 5 தேர்களும் இந்த தேரோட்டத்தில் இடம் பெறும்.ஏராளமான பக்தர்கள் காலையிலேயே கூடி இருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு  சன்னிதியை சுற்றி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

 

Tags : குற்றாலநாதர் திருக்கோயிலில் திருவாதிரை  தேர் திருவிழா.

Share via