4000 கோடி எங்கே? - நிர்மலா சீதாராமன் கேள்வி

by Staff / 22-12-2023 01:53:51pm
4000 கோடி எங்கே? - நிர்மலா சீதாராமன் கேள்வி

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ4,000 கோடி செலவு செய்திருக்கிறோம், என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது என ஒரு தமிழ்நாடு அமைச்சர் பேசினார். ஆனால், சென்னையில் வெள்ளம் வந்த பிறகு, 42% தொகை மட்டுமே செலவு செய்தோம் என்கிறார் என கூறியுள்ளார். மேலும் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், ஏன் ரூ4,000 கோடி பற்றி தவறான தகவலை கொடுத்தார்கள்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via