சாலையை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

by Admin / 22-12-2023 03:42:28pm
சாலையை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம்  கயத்தார் , பன்னிர்குளம்  மேலகூட்டுப்பண்ணையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 600ஏக்கரில்  வரை கத்தரி, வெண்டை, சுரைக்காய், தக்காளி, புடலங்காய், மற்றும் இப்பகுதியில் மாம்பழம், கொய்யா,நெல்லிக்காய், கருவேப்பிலை, உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் 15 விவசாய குடும்பங்கள் இங்கே தங்கி இருந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், கருவேப்பிலை, ஆகியவை  தினமும்  வேன்கள் மூலமாக நெல்லை, தூத்துக்குடி ,கோவில்பட்டி ,மதுரை சென்னை வரை உள்ள சந்தைகளுக்கு பன்னீர் குளம் - அகிலாண்டபுரம்  இணைப்பு சாலை வழியாக கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனத்த மழையின் காரணமாக பன்னீர் குளம் - அகிலாண்டபுரம்,  இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி இருப்பது மட்டுமின்றி சாலை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், தங்களது நிலத்திற்கு செல்ல முடியாமலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இதனால் கடுமையான வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு தங்கி இருந்து விவசாயம் செய்து வரும் குடும்பத்தினர் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஏற்கனவே மழைக்கு முன்பே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது பன்னீர்குளம் - அகிலாண்டபுரம் சாலையை முற்றிலுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

சாலையை சீரமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
 

Tags :

Share via