உலகளவில் கொரோனா பாதிப்பு 52% அதிகரிப்பு

by Staff / 24-12-2023 01:30:13pm
உலகளவில் கொரோனா பாதிப்பு 52% அதிகரிப்பு

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52% உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8% குறைந்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3000ஆக அதிகரத்துள்ளது. நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

Tags :

Share via