தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் பிடிபட்டது.

by Admin / 24-12-2023 01:27:58pm
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் பிடிபட்டது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளா மாநிலத்திற்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும்,50-க்கும் மேற்பட்ட கேரள மாநில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 23ஆம் தேதி தென்காசியில் இருந்து கேரள மாநிலம் ஈரேட்டு பேட்டை என்கின்ற பகுதிக்கு சென்ற கேரள மாநில அரசு பேருந்தை ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது அதில் ஒரு சென்னையைச் சார்ந்த அப்துல் மாலிக் என்பவரது டிராவல் பேக்கை போலீசா சோதனை செய்ததில் அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் சுமார் 25 லட்ச ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த நபரையும் பணத்தையும் ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சென்னையைச் சார்ந்த அப்துல் மாலிக் என்பதும் பத்தினம்திட்டைக்கு ஒரு நபரிடம் கொடுப்பதற்காக 25 லட்ச ரூபாய் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் அந்த நபரையும் பணத்தையும் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்மலை போலீசார் அப்துல் மாலிக்கிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எதற்காக கொடுத்து விடப்பட்டது. இந்தப்பணம் ஏதும் நாச வேலைகளுக்கு பயன்படுத்துவதற்காக கொடுத்து விடப்பட்டதா இல்லை தற்பொழுது கேரள மாநிலத்தில் சபரிமலை சீசன் காலம் என்பதால் ஏதும் அசம்பாவிதம் ஏற்படுத்துவதற்காக தீவிரவாத கும்பல் மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டதா? இல்லை ஹவாலாப்பணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவம்  எல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூபாய் 25 லட்சம் பிடிபட்டது.

Share via