கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலவையாக செலுத்தி பரிசோதிக்க நிபுணர் குழுவினர் பரிந்துரை...

by Admin / 30-07-2021 02:11:34pm
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலவையாக செலுத்தி பரிசோதிக்க நிபுணர் குழுவினர் பரிந்துரை...



கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய 2 தடுப்பூசிகளை கலவையாக செலுத்தி பரிசோதிக்க, அரசு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சோதனை, வேலூரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிசீல்ட் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சினுக்கு மட்டும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இரு தடுப்பூசிகளையும் கலந்து பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாக சோதனை நடத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிசோதனையை, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் நடத்துவதற்கும், அந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் கோவாக்சின் தடுப்பூசியை, மூக்கின் நாசி வழியாக செலுத்த கூடிய தடுப்பு மருந்துடன் ஒன்றாக கலவையாக்கி பயன்படுத்துவது குறித்த ஆய்வுக்கும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைக்க பெற்றவுடன் வேலூரில் உள்ள கிரிஸ்துவ மருத்துவ கல்லூரியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பயாலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கவும் மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

 

Tags :

Share via