தனக்கென ஒரு தனித்திறத்துடன் திகழ்ந்து தனித்த அரசியல் இயக்கத்தை தொடங்யகிவா்.

by Admin / 28-12-2023 04:02:02pm
 தனக்கென ஒரு தனித்திறத்துடன் திகழ்ந்து தனித்த அரசியல் இயக்கத்தை தொடங்யகிவா்.

திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனித்திறத்துடன் திகழ்ந்து தனித்த அரசியல் இயக்கத்தை தொடங்கி ,தமிழ்நாடு அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக திகழ்ந்த விஜயகாந்த் இ ன்று காலை 6 மணி அளவில் காலமானார்.

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட விஜயகாந்த், தன் கடின முயற்சியால் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர். எம்ஜிஆரை போன்று அரசியலிலும் வெற்றி பெறுவார் என்கிற நிலையில் கணிக்கப்பட்ட கணிப்புகளை அவர் நிஜமாக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவராக ஆனார் .ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சட்டமன்றத்தில் நடந்த வாக்குவாதத்தில் நாக்கை துருத்தி  எதிர்த்த பொழுது, ஜெயலலிதா சொன்னார், இன்றோடு உங்களுடைய அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று .அதற்கு பின்னர் ஜெயலலிதா சொன்னது போன்று விஜயகாந்தினுடைய அரசியல் வளர்ச்சி என்பது தேய்பிறையாகவே  போனது.. விஜயகாந்த் - ஜெயலலிதாவோடு  ஒத்துப்போய் அரசியல் செய்திருந்தால் ,,அரசியலில் மிகப்பெரிய ஒரு தலைவராக உருவாகி இருப்பார்.. மூத்த அரசியல் தலைவர் கலைஞரோடும்  அவர் எதிர்நிலை போக்கிலே அரசியல் செய்ததின் காரணமாக... அவருடைய அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை அடைய முடியாமல்போய் விட்டது... கலைஞரோடு நெருக்கமாக இருந்து... கலைஞரின் வழியில் தான் செல்வேன் என்று சொல்லி அரசியல் களத்திற்குள்ளே இறங்கிய விஜயகாந்த்.. ஒரு கட்டத்தில், தன்னுடைய திருமண மண்டபத்தை தி.மு.க ஆட்சி காலத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக எடுத்த பொழுது,,கலைஞரை  மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததோடு தி.மு.க அழிந்து விடும் என்றெல்லாம் பேசினார் .ஆனால் ,கலைஞர் எவ்வளவோ சமாதானம் செய்தும் திருப்தி அடையாத விஜயகாந்த்- ஜெயலலிதாவோடு இணைந்து அரசியல் பயணத்தில் 25 எம்.எல்.ஏ.களை பெற்று எதிர்க்கட்சித்தலைவரானாா்.. .  சரியான ஒரு புரிதல் இல்லாத காரணத்தினால், அரசியல் நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்கு சரியான நபர் இல்லாத காரணத்தினால், ஜெயலலிதாவை எதிர்த்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொண்டார்.. பத்திரிக்கையாளர்களோடு பல்வேறு நிகழ்வுகளில் சண்டையிட்டதும் தம் கட்சிக்காரர்களை பொதுவெளியில் வைத்து அடிக்க கை ஓங்கியதும் போன்ற செயல்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை குலைக்கும் முகமாகவே இருந்தது. திரைத் துறையில் நடிப்பு என்பது அவர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகவும் அதன் வழியாக வந்த வருமானத்தை அவர் வீட்டிற்கு வருகிறவர்களுக்கு உணவு சமைத்து போட்டது பெரும் விஷயமாக பேசப்பட்டாலும் .... அரசியல் இயக்கத்தை நடத்திய பொழுது, எல்லோரையும் அனுசரித்து செல்லாத அவருடைய போக்கு அவருக்கு எதிராக உருவாயிற்று ..கட்சியை ஆரம்பித்த உடன் விருதாச்சலத்தில் வெற்றி பெற்றவர் .அடுத்து உளுந்தூர்பேட்டையில் தோற்றுப் போனது. அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக  அமைந்தது.. தமிழகத்தை பொறுத்த வரை இரண்டு திராவிட இயக்கத்தை எதிர்க்கின்ற, எந்த ஒரு கட்சியும் -அமைப்பும் வளர்ச்சி அடையாது என்பது நிதர்சனம்.

 

 தனக்கென ஒரு தனித்திறத்துடன் திகழ்ந்து தனித்த அரசியல் இயக்கத்தை தொடங்யகிவா்.
 

Tags :

Share via