8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 09-01-2024 01:30:30pm
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via