கேரளாவில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன்..

by Staff / 10-01-2024 02:54:00pm
கேரளாவில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன்..

2024 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் உள்ள ஏதேனும் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் உன்னி முகுந்தன், மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இந்த மாதத்திற்குள் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான நடிகர் உன்னி முகுந்தனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. உன்னி முகுந்தன் தமிழில் சீடன் படத்தில் நடித்துள்ளார். மேலும், சசிக்குமார், சூரியுடன் இணைந்து தமிழில் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

 

Tags :

Share via