31ஆம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

by Staff / 11-01-2024 02:23:41pm
31ஆம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

மக்களவை தேர்தலுக்கு முன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இம்மாதம் 31ஆம் தேதி முதல், பிப்ரவரி 9ஆம் தேதி வரை, கடைசியாக நடக்கிறது. இந்த கூட்டங்களில் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பண உதவி இடைக்கால பட்ஜெட்டில் இரட்டிப்பாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், தேர்தல் நெருங்குவதால் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via