192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 24-03-2022 11:07:10pm
 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாயில்நடைபெறும்  192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் இன்று மாலை புறப்பட்டார் , அமைச்சர்கள்  திமுக நிர்வாகிகள் வழிஅனுப்பி வைத்தனர்.. இக்கண்காட்சியில், தமிழக அரசுசார்பில்தகவல்,மின்னனுவியல்,சுற்றுலா,மருத்துவம்,கலை, . கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன

 முதலமைச்சருடன்  அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. அப்துல்லா,  உதயநிதி ஸ்டாலின்  சென்று உள்ளார்.. துபாய் சர்வதேச கண்காட்சியில் நாளை பங்கேற்கும் முதலமைச்சர், தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  அழைப்பு விடுக் க உள்ளார். 

 இந்த கண்காட்சியின்போது பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  28-ந்தேதி அபுதாபியில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று 4 நாள் பயணத்தை முடித்து திரும்பவுள்ளார்..புறபடுவதற்கு முன்னதாக அண்ணா,கலைஞா் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினாா்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via