நெல்லை மாநகராட்சியில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பிசு.பிசுக்க வாய்ப்பு..?

by Editor / 11-01-2024 11:35:57pm
நெல்லை மாநகராட்சியில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பிசு.பிசுக்க வாய்ப்பு..?

நெல்லை மாநகராட்சியில் மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம்  குறித்த வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் கவுன்சிலர்கள் மூன்று வெவ்வேறு குழுக்களாக  வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.கட்சியின் உத்தரவை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளதாகவும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் மாவட்ட செயலாளரும் , பாளையங்கோட்டை எம்எல்ஏவுமான  அப்துல் வகாப் தலைமையில் 20 கவுன்சிலர்களும்,முன்னாள் அமைச்சரும்,.மாவட்ட பொறுப்பாளருமான  டிபிஎம்.மைதீன்கான் தலைமையில் ஒரு குழுவும்,  கவுன்சிலர்கள் ஒரு குழு என 3 குழுக்களாக பிரிந்து விருதுநகர்க்குஅமைச்சரை சந்திக்க சென்றதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் அமைச்சரை சந்திக்க சென்றனர்.இந்த நிலையில் மேயர் மீது 
கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன...

நெல்லை மாநகராட்சியில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பிசு.பிசுக்க வாய்ப்பு..?
 

Tags : நெல்லை மாநகராட்சியில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பிசு.பிசுக்க வாய்ப்பு..?

Share via