வடிவேலுக்கு பின் அண்ணாமலை தான் காமெடி பீஸ்"

by Editor / 05-09-2021 06:51:34pm
வடிவேலுக்கு பின்  அண்ணாமலை தான் காமெடி பீஸ்

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "கடந்த அதிமுக ஆட்சியில் திசா கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதில்லை. ஆனால் தற்போது ஆறு நாள் சட்டமன்ற பணிகளை முடித்துவிட்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று இரண்டு அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 22 துறை சம்பந்தமான பிரச்சனைகளை ஆய்வு செய்ததும் புதிய அரசு அமைந்த பின் நடந்த மாற்றத்திற்கான ஒரு பகுதியாக இதை நான் பார்க்கிறேன். இரண்டு அமைச்சர்களும் கலந்துகொண்டு இருபத்திமூன்று திட்டங்கள் சம்பந்தமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்தனர். இது ஆரோக்கியமான மாற்றமாக நான் கருதுகிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக பாஜக எம்.எ.ஏக்கள் பலம் 150 ஆக அதிகரிக்கும் எனவும் அடுத்த 5 ஆண்டுகளில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலையை பொறுத்தமட்டில் உள்ளே என்ன பேசுகிறார் வெளியே என்ன பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய அரசியல் பார்வையும் அவருடைய பேச்சும் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. 4 என்பது எட்டு ஆகுமா இல்லை? 150 ஆகுமா? இல்லை மீண்டும் பழைய பழைய நிலைக்கே திரும்புமா? என தெரியவில்லை அவர்களுடைய கனவு கனவாகவே இருக்கட்டும்.

கடவுள் இருப்பதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வாரா என பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார். அவர் இப்படி பேசுவதை சீரியசாக எடுத்துக் கொண்டால் அது நமக்கு காமெடியாக போய்விடும். வைகைப்புயலுக்கு பின்னால் நமக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான். என தெரிவித்தார்.

 

Tags :

Share via