திமுக கவுன்சிலர்களை காணவில்லை நெல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால்  பரப்பரப்பு. 

by Editor / 12-01-2024 11:22:19pm
திமுக கவுன்சிலர்களை காணவில்லை நெல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால்  பரப்பரப்பு. 

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பிற்கு இன்று ஒருவர் கூட வரவில்லை ஆகையால் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் தெற்கு மாவட்ட பாஜக மண்டல தலைவர் மலையரசன் சார்பாக மாவட்ட முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.அதில்,
காணவில்லை.காணவில்லை.

நெல்லை மாநகராட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்களை  காணவில்லை.தகவல் சொல்பவருக்கு பொங்கல் பரிசு என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

 

Tags : திமுக கவுன்சிலர்களை காணவில்லை நெல்லையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால்  பரப்பரப்பு. 

Share via