இன்று தமிழக முதலமைச்சரால் உலகின் மிகப்பெரிய ஏறுதழுவல்அரங்கம் திறக்கப்பட உள்ளது.

by Admin / 24-01-2024 08:04:30am
இன்று தமிழக முதலமைச்சரால் உலகின் மிகப்பெரிய ஏறுதழுவல்அரங்கம்  திறக்கப்பட உள்ளது.

இன்று தமிழக முதலமைச்சரால் 62. 78 கோடி செலவில் மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அலங்காநல்லூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஏறுதழுவல் மைதானம் திறக்கப்பட உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஞாபகார்த்தமாகஏறு தழுவுதல் களம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1.8 3 .2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு தமிழக பொதுப்பணி துறையால் கட்டப்பட்ட இந்த ஏறுதழுவுதல் களத்தில் ஐயாயிரம் பேர் அமர்ந்து காணும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு பார்வையாளர்களை கொண்ட இருக்கை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் வழியாக களம் புகும் காளைகளை அடக்குவதற்கென்று ஏறுதல் களம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏறு தழுவுதல் களத்தில் அருங்காட்சியகம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்கள் தங்கும் அறை ,தோட்டம் என 83 ஆயிரத்து 462 சதுர பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன இந்த ஏறுதழுவுதல் இளைஞர்களின் வீரத்தை புலப்படுத்தும் அங்கீகாரம் செய்யும் ஒரு இடமாக..... ஒரு போட்டியாக இந்த ஏறுதழுவுதல் களம் இருந்தது. சங்க இலக்கிய கலித்தொகையில் முல்லை கலியில் முழுக்க முழுக்க ஏறுதழுவுதல் பற்றிய செய்திகளையே அதிகம் பேசுகின்றது. கொல்லறிந்து கோடு அஞ்சுவனை மறுமையிலும்புல்லாளே ஆயர்மகள் என்று சொல்லுகிற இலக்கிய தொடரும், நம் நினைவுக்கு வரும். ஒர் இளைஞன் தனக்குரிய துணையைத் தேடுவதற்கு அன்றைக்கு புருஷ லட்சணமாக இருந்தது வீரம் தான் .குறிஞ்சி- முல்லை திரிந்து பாலையாக வடிவம் பெற்ற பகுதியை கடந்து செல்கையில் ஏற்படக்கூடிய கள்வர்களிடமிருந்து காப்பாற்றக்கூடிய பேராண்மை ஒவ்வொரு இளைஞனுக்கும் இருக்க வேண்டும். அது மங்கி போய் விடக்கூடாது என்பதற்காகத்தான், அன்றைய காலகட்டங்களில் இளைஞர்களுக்கு இந்த காளையை அடக்க கூடிய ஒரு தேர்வாகவே இது இருந்து வந்தது.

போர்க்காலங்களில் ,போர்க்களத்தில் சண்டையிட்டு வந்தவர்கள் தங்கள் போர்குணத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக வருடம் தோறும் இந்த மாடு பிடி ஏறுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நம் இலக்கியத்தின் வழி பார்க்க முடிகிறது. தொன்மையான, இந்த மாடு பிடி ஏறு தழுவுதல், தமிழர்களின் பாரம்பரியமிக்க ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கப் பெறும் இந்த ஏறுதழுவுதல் களம் கிரேக்க- ரோமானியர்கள் வீர விளையாட்டிற்கு என்று ஆரம்பித்திருக்கும் களத்தை போன்று தனி களத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது . எல்லா விளையாட்டிற்கும் ஆடுகளம் இருப்பது போன்று இதுவரை ஏறுதல்களுக்கு என்று பொதுவான ஒருகளம் இல்லை. வீதிகளிலே ,மக்கள் நடமாடக்கூடிய- வாழக்கூடிய பகுதிகளிலே நடந்து கொண்டிருந்த இந்த நிகழ்வு இனி ஒரு தனித்த களத்தில்- அரங்கத்தில் நிகழ இருக்கிறது..

இன்று தமிழக முதலமைச்சரால் உலகின் மிகப்பெரிய ஏறுதழுவல்அரங்கம்  திறக்கப்பட உள்ளது.
 

Tags :

Share via