அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

by Staff / 25-01-2024 03:50:56pm
அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் என்று மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 40 தொகுதிகளில் வெல்வதுடன், திமுக பங்கு வகிக்கும் அரசாங்கம் மத்தியில் அமைய வேண்டும். உங்களின் மாவட்டத்துக்கும், பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் நீங்கள்தான் பொறுப்பு. எல்லா தொகுதியிலும் நான்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள் என அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via