செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

by Editor / 25-01-2024 09:01:41pm
செய்தியாளர்  தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் செய்தி சேனல் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முழுவதும் பத்திரிகையாளர்கள் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மூத்த பத்திரிக்கையாளர் கே.எம்.கே. இசக்கி ராஜன் தலைமை தாங்கினார். பத்திரிகையாளர்கள் கணபதி. பாலசுப்பிரமணியன் .மைதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பத்திரிகையாளர் ஆயிரம் பேரை முத்து சுவாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பத்திரிகையாளர்கள் கணேசன், மகேஷ் செந்தில் ஹரிஹரன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதன் தொடர்ச்சியாக நியூஸ் 7  செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இவ்ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட தாலுகாக்களை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர் கலந்துகொண்டனர்..

 இனிவரும் காலங்களில்,இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உரக்க குரல் எழுப்பி கோரிக்கை விடுத்தனர்.

 

Tags : செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Share via