விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

by Editor / 30-09-2023 10:21:48pm
 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலா சென்றவர்கள் இன்று தென்காசிக்கு திரும்பும் வழியில் சுற்றுலா பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பரளி யார் அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒப்புடாதி, முருகேசன், இளங்கோ, தேவிகலா, கௌசல்யா, மற்றும் சிறுவான். நிதின்கண்ணா உள்ளிட்ட  எட்டு பேர் உயிரிழந்தனர். என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை வழங்கவும், அறிவுறுத்தியுள்ளதாகவும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்,, லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  ரூ .50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags : விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Share via