லடாக்கின் லே பகுதியில்  இன்று அதிகாலை நிலநடுக்கம்.

by Editor / 30-01-2024 10:15:37am
லடாக்கின் லே பகுதியில்  இன்று அதிகாலை நிலநடுக்கம்.

லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தங்கி உள்ளனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கம் தொடர்பான முழு தகவல் இன்னும் வெளிவரவில்லை.

 

Tags : லடாக்கின் லே பகுதியில்  இன்று அதிகாலை நிலநடுக்கம்.

Share via