பிரேசிலில் ஒருநாளில் 389 பேர் கரோனாவுக்குப் பலி

by Admin / 03-08-2021 02:52:39pm
பிரேசிலில் ஒருநாளில் 389 பேர் கரோனாவுக்குப் பலி



பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 389 பேர் பலியாகினர்.

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கரோனா பலி எண்ணிக்கை இங்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 389 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,57,223 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 15,143 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,99,53,501 ஆக அதிகரித்துள்ளது. 1,86,87,203 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

பிரேசிலில் 14.23 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 10 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 4.14 கோடி பேர் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனா பலி 1,300க்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக பலி எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via