539 கோயில்களில் தூய்மை பணிகள்
தமிழகம் முழுவதும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 539 கோவில்களில் மூன்று நாட்களுக்கு, பெருமக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த 539 கோவில்களிலும் நேற்று முதல் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்த கோவில்களில் உள்ள பிரகாரம், நந்தவனம், தண்ணீர் தொட்டி, மதில்சுவர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகள், செடிகளை அகற்றும் பணிகள், மண்டபம் மற்றும் தூண்களை சுத்தம் செய்யும் பணிகள், தெப்பக்குளம் தூய்மை என்று மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Tags :