மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை பத்து மணிக்கு-இஸ்ரோ அறிவிப்பு.

by Editor / 21-10-2023 08:27:26am
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை பத்து மணிக்கு-இஸ்ரோ அறிவிப்பு.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஆளில்லா மாதிரி விண்கலம் இன்றுவிண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முதல்கட்ட சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒற்றை பூஸ்டர் (விகாஸ் இயந்திரம்) கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் ஆளில்லாத விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஏவப்படுமென  மேகமூட்டங்கள் காரணமாக 8.30 மணிக்கு ஏவப்படுமென அறிவித்துள்ளது.இஸ்ரோ....எாிபொருள்பிரச்சனைகாரணமாக விண்கலம் ஐந்து நிமிடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு பத்து மணிக்கு ஏவப்படுமென்று இஸ்ரோ அறிவிப்பு..

 

Tags : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை

Share via