8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

by Editor / 10-02-2024 09:13:27am
8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில்  என்ஐஏ  சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் மற்றும் இத்ரீஸ் உள்ளிட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் 

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் பக்ருதீன்(35). இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார் .இவரது வீடு ஏர்வாடியில் உள்ளது. இன்று காலை ஏர்வாடியில் உள்ள அவரது வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் அலி ஜிகாத் என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக NIA அதிகாரிகள் வருகை. இவர் வக்தே- இஸ்லாம் என்ற அமைப்பில் இருந்துவந்த நிலையில் கோவையில் கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகின்றன.

இவர்கள் தடைச்செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

 

Tags : 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

Share via