யாருடைய ஆட்சியில் அதிக கடன்வாங்கப்பட்டது?: பேரவையில் விவாதம்

by Staff / 22-02-2024 01:21:10pm
 யாருடைய ஆட்சியில் அதிக கடன்வாங்கப்பட்டது?: பேரவையில் விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்கள் மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் பி. தங்கமணி பேசும்போது, யார்ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து திமுக-அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சியில் அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிலும் மூலதனச் செலவை விட வருவாய் செலவு தான் அதிகமாக உள்ளது. திமுக ஆட்சி முடியும் போது கடன் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாக வந்து விடும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: ஆண்டுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம். வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் வருவாயைப் பெருக்கவும் அனைத்துவிதமான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. தமிழகத்தில் நிதி மேலாண்மை சீராகவே உள்ளது. கடனும் கட்டுக்குள்தான் இருக்கிறது.

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால் அந்த திட்டம் மீண்டும் தொடரப்படுமா?அமைச்சர் தங்கம் தென்னரசு: அதற்கு உகந்த சூழல் ஏற்படும் போது முதல்வருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைமைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்.

 

Tags :

Share via