அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

by Staff / 22-02-2024 01:09:13pm
அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா நோட்டீஸ்

தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், த்ரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via