தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

by Editor / 24-02-2024 07:32:42am
தமிழகத்தில் 3 நாட்கள்  மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நாளை (பிப்ரவரி 25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

Tags : தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.

Share via