சாந்தனின் உடலை அனுப்பி வைக்க சான்றிதழ்

by Staff / 28-02-2024 12:32:33pm
சாந்தனின் உடலை அனுப்பி வைக்க சான்றிதழ்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்வதற்கான தடையில்லா சான்றிதழை சென்னை காவல் ஆணையரகம் வழங்கியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. உடலை இலங்கை அனுப்பி வைக்க தேவையான ஆவணங்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து முறையான அனுமதி கிடைத்ததும் அவரது உடல் கார்கோ விமானம் முலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

 

Tags :

Share via