சிவகாசியில் இருந்து வந்த மகான் தாடிக்கார சித்தர் 

by Editor / 02-03-2024 10:33:41am
 சிவகாசியில் இருந்து வந்த மகான் தாடிக்கார சித்தர் 

மகான் தாடிக்கார சித்தர் 

 சிவகாசியில் இருந்து வந்தவர். மருத்துவத்தில் வல்லவர்.  இவரின் மருத்துவத்தோடு, குண்டலினி தவத்தின் மகத்துவமும் சேர அதன் விளைவாக இவர் பலரின் நோய்களை பார்வையாலேயே குணப்படுத்தினாராம்.வைத்தீஸ்வரன் கோவில் உருண்டை போல். இவர் விபூதியை உருண்டையாக உருட்டி தன்னை காண வரும் நோயாளிகளுக்கு கொடுப்பார். அதை உண்பவர்களின் தீராத நோய்கள் யாவும் தீருமாம். தாடிக்கார சித்தர் ஜீவ சமாதி அடைந்து 115 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவரின் சீடரான குழந்தைவேல் பரதேசி சுவாமிகளும் இதே காலத்தில் தான் சமாதி அடைந்தார். தாடிக்கார சித்தர் கோவில் தினமும் இரவு 8 மணிவரை திறந்து இருக்கும். இவரின் சீடரான குழந்தைவேல் பரதேசி   சித்தரின் கோவிலை. நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம். எந்நேரமும் திறந்தே இருக்கும். வியாழக்கிழமை, பிரதோஷம், பௌர்ணமி போன்ற நாட்களில் மட்டும் இரவு 8 30 க்கு மேல் குழந்தைவேல் சித்தர் கோவிலில் பூஜை நடக்கும். அந்த பூஜை முடிய இரவு 10 30 க்கு மேல் ஆகி விடும். தனது குரு போன்றே குழந்தைவேல் பரதேசி சுவாமிகளும் பல அதிசயங்கள், அற்புதங்களை செய்தார். மிக முக்கியமாக. குழந்தைவேல் பரதேசி  சுவாமிகள் பலருக்கு..... நேத்ர தீட்ஷை. அதாவது பார்வையாலேயே ஞானம் புகட்டுவதை செய்து இருக்கிறார். மிக சக்தி வாய்ந்த துறவி இவர். குழந்தை வேல் பரதேசி  சுவாமிகள் கோவிலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால். இங்கு பூஜை செய்பவரே ஒரு மகான்.  தொடர்ந்து 2 ஆண்டுகளாக அந்த மகான்  மௌன விருதம் இருந்து கொண்டு இருக்கிறார். மௌன சித்தர் என்றே அவரை மக்கள் அழைக்கிறார்கள். வரும்  வியாழன் இரவு 8 மணிக்கு மேல் அந்த மௌன சித்தரை  பார்க்கலாம். எவ்வாறு? செல்வது.கிண்டி ரயில் நிலையம் அருகே GST ரோடில் இருக்கும் மெரிடின் 5 நட்ஷத்திர ஹோட்டலை  ஒட்டி ஒரு தெரு போகும். அந்த ஹோட்டலை தாண்டியவுடன் முதல் லெப்ட். அந்த தெருவில் ஐந்தாவது லெப்ட் எடுத்தால் தாடிக்கார சாமி  தெரு  வரும்.  அவரை தரிசித்த பின். தாடிக்கார சித்தர் கோவிலில் இருந்து லெப்ட் எடுத்து  மீண்டும்  ஒரு பர்ஸ்ட் லெப்ட்  எடுக்க வேண்டும். எடுத்தால் சௌரி தெரு வரும். அந்த சௌரி தெருவில் இடது பக்கம் ஒரு சிறிய சந்து இருக்கும். அந்த சந்தின் முனையில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஒரு போர்ட் வைத்து இருப்பார்கள். அந்த பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த குழந்தைவேல் சித்தருக்கு நிறைய தொண்டும் புரிகிறார்கள் என்பது ஆச்சர்யமான ஒரு உண்மை. விஜய் கூட குழந்தை வேல் சித்தரை தரிசித்ததாக.சௌரி தெருவில் உள்ள எஸ் ஆர் பள்ளியில் தான் இந்த சித்தர் 115 ஆண்டுகளுக்கும் மேலாக அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். வெறும் மண்  தரை. மற்றும். சித்தரின் ஜீவ சமாதி, அந்த ஜீவ சமாதிக்கு  அருகில்  உள்ள சிவலிங்கத்திற்கு  மேலே ஒரு கூரை. இது தான் அந்த சித்தர் கோவிலின் தோற்றம். அந்த மண் தரையை சிமெண்ட் தரையாக மாற்ற  முயற்சி செய்தும். அதற்கு அந்த சித்தரிடம் இருந்து உத்தரவு வராத காரணத்தால். செய்யவில்லை

 

Tags :

Share via