இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும்-செல்வபெருந்தகை 

by Editor / 04-03-2024 08:47:08am
இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும்-செல்வபெருந்தகை 

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை வருகை காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டுவந்து உற்சாக வரவேற்புஅளித்தனர்.பின்னர் விமான நிலையப்பாகுதியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 தமிழகத்தில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தமிழகம் மற்றும் இந்தியாவில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதற்கு மத்திய பாரதிய ஜனதா அரசு தான் காரணம்என்று குற்றம் சாட்டினார்.மேலும் 
 பாரதிய ஜனதா கட்சி முதற்கட்ட வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் போட்டியிடாமல் ஓட்டம் பிடித்துவருவதாகவும், இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என்றும் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Tags : இந்தியா கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும்-செல்வபெருந்தகை 

Share via