இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி  - உச்சகட்ட பாதுகாப்பு

by Editor / 04-03-2024 09:10:27am
இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி  - உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கு வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.20 மணிக்கு கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், மாலை 6.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹைதராபாத் செல்கிறார்.
 

 

Tags : இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி  - உச்சகட்ட பாதுகாப்பு

Share via