பாமக, தேமுதிகவுடன் இன்று அதிமுக பேச்சுவார்த்தை

by Staff / 06-03-2024 01:38:30pm
பாமக, தேமுதிகவுடன் இன்று அதிமுக பேச்சுவார்த்தை

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த முறை கொடுத்தது போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகக்கூறி பாமகவுடன் கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.பாமக தரப்பில் தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.பாமகவின் பட்டியலில் உள்ள பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிகவும் கோருவதால் அதிமுக - பாமக கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், அதிமுக - பாமக இடையே இன்று (மார்ச் 5) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதேபோன்று, தேமுதிகவுடனும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via