பெண்கள் குறித்து சர்ச்சை: எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 06-03-2024 01:40:38pm
பெண்கள் குறித்து சர்ச்சை: எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

பாஜக முன்னாள் தேசிய செயலாளரான எச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு தனது சமூக வலைதளப்பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடுநகர் போலீஸார், எச். ராஜாமீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள எம். பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட எச். ராஜா ஆஜரானார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை மார்ச் 20-க்கு தள்ளி வைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo