தேமுதிக கூட்டணி - ஓரிரு நாளில் அறிவிப்பு

by Staff / 19-03-2024 01:46:23pm
தேமுதிக கூட்டணி - ஓரிரு நாளில் அறிவிப்பு

தேமுதிக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்பமனு வாங்குவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை அதிமுக, பாஜக கொடுக்க முன் வராததால் தொடர்ந்து கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது.
 

 

Tags :

Share via