வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு

by Staff / 25-03-2024 12:02:45pm
வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு

கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர், 2 நாட்களில் உயிரிழந்தனர். ஐதராபாத்ததை சேர்ந்த சுப்பாராவ் (57) நான்காவது மலையிலும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலையிலும் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியைச் சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில், இதய பிரச்னை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo