ரூ.11 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்தல்

by Staff / 01-04-2024 01:56:50pm
ரூ.11 கோடி மதிப்பிலான கொக்கைன் கடத்தல்

சியரா லியோன் நாட்டில் இருந்து இன்று மும்பை வரும் விமானத்தில் போதைப்பொருள்கள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பயணியை சோதனை செய்தபோது வயிற்றுக்குள் கொக்கைன் போதைப்பொருள்களை கேப்சூல் வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. மொத்தம் 74 கேப்சூல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via