விசிக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன்

by Staff / 09-04-2024 01:14:27pm
விசிக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திருமாவளவன்

2024 மக்களவை தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையினை இன்று சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் வெளியிட்டார். வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விசிக வாக்குறுதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு

தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கை உடனான வெளியுறவு கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும்

தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக்கூடாது

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்

 

Tags :

Share via