பள்ளத்தில் கவிழ்ந்த டிரக் - 13 பேர் பலி
பாகிஸ்தான் ஹப் மாவட்டத்தில் நேற்று ஷா நூரானி சன்னதிக்கு பக்தர்கள் டிரக் மூலம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :