பிரதமரின் பிரச்சாரத்திற்கு தடை வேண்டும்: அமைச்சர் கோரிக்கை

by Staff / 11-04-2024 04:29:09pm
பிரதமரின் பிரச்சாரத்திற்கு தடை வேண்டும்: அமைச்சர் கோரிக்கை

தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இவரது பேச்சுக்கள் யாவும், இச்சட்டப்பிரிவிற்கு எதிரானது. தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணி கட்சியாக செயல்படாமல் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். நரேந்திர மோதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியாவில் 2024 தேர்தல்கள் முடிவடையும் வரை அவரது பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via