வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல் - தேதி அறிவிப்பு

by Staff / 06-05-2024 12:33:08pm
வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல் - தேதி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தொகுதியில் வருகிற மே 14ஆம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து, மூன்றாவது முறையாக மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வாரணாசியில் பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via