ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏக்கள்: பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு

by Staff / 08-05-2024 12:11:43pm
ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏக்கள்: பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு

ஹரியானாவில் 2019ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில், 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜேஜேபி 10 இடங்களிலும், லோக் தள் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். இந்த நிலையில், 10 தொகுதிகளில் வென்ற ஜேஜேபியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. தற்போது மக்களவைத் தேர்தலின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாஜகவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு ஜேஜேபி கூட்டணியை முறித்தது. இதனிடையே பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவித்ததோடு, காங்கிரஸ்-க்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.இதனால் ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது. ஹரியானா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்ததால் அங்கு ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via