‘வாடிவாசல்’ அப்டேட் கொடுத்த அமீர்

by Staff / 11-05-2024 01:42:51pm
‘வாடிவாசல்’ அப்டேட் கொடுத்த அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'வாடிவாசல்'. இந்த படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன் பிறகு, அமீர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக அமீர் தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via