வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

by Editor / 09-08-2021 07:17:27pm
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?


தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நிதி சுமை அதிகம் என்று கூறி உள்ளது அச்சம் அளிக்கிறது. சரி இந்த அறிக்கையில் முக்கி ய அம்சங்கள் சில..

10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான செலவு 185.27% அதிகரிப்பு
10 ஆண்டுகளில் பணியாளர்கள் செலவு -31.11% ஆக குறைந்துள்ளது.
10 ஆண்டுகளில் ஓய்வூதிய செலவு/ குடும்ப ஓய்வூதியம் 137.37% அதிகரிப்பு
10 ஆண்டுகளில் மொத்தமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கான செலவு 104.24% அதிகரிப்பு
1 கிலோ லிட்டர் குடிநீர் விநியோகிக்க செலவு ரூ20.81.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ10.42
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ8.11 என குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரவேண்டிய குடிநீர் கட்டணம் நிலுவைத் தொகை (பாக்கி) ரூ484.10 கோடி.
குடிநீர் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் தர வேண்டிய கடன் பாக்கி விவரம்:
மாநகராட்சிகள் ரூ261.05 கோடி
நகராட்சிகள் ரூ10.09 கோடி
பேரூராட்சிகள் ரூ10.82 கோடி
கிராம ஊராட்சிகள் ரூ202.14 கோடி
குடிநீர் வடிகால் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் 2,583
குடிநீர் வடிகால் வாரியத்தில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 9,101.
குடிநீர் வாரியம் செலுத்த வேண்டிய கடன் ரூ2890.26 கோடி.
தமிழ்நாடு மின்சார வாரியம், குடிநீர் வாரியத்துக்கான கட்டண நிலுவைகளை உள்ளாட்சி அமைப்புகளால் செலுத்தவில்லை. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள்/ வாரியங்கள் வலுவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் மாநில அரசுக்கு கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்துகின்றன.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கடன் ரூ1909.88 கோடி.
சென்னையில் 1 கிலோ லிட்டருக்கான செலவு ரூ36.58
1 கிலோ லிட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை ரூ14.08

இப்படி உண்மை தருவதை வெள்ளை அறிக்கை என்கிறார்கள் 
அது குறித்த முக்கிய தகவல்கள் சில இதோ...
 ஊடகங்கள் அல்லது அமைச்சர்கள் முதலமைச்சர்கள் மூலமாக வரும் தகவல்களை விட அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்படுகின்ற அதிகாரப்பூர்வ அறிக்கைதான் வெள்ளை அறிக்கை.

* இந்த வெள்ளை அறிக்கை என்ற முறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

* வெளிப்படையான புள்ளி விவரங்களோடு உள்ளதை உள்ளபடி உண்மை நிலவரத்தை எடுத்துரைப்பது.

* எளிமையாக சுருக்கமாக தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை இருத்தல் வேண்டும். இதன் மூலம் அரசின் குறிக்கோள்களை மக்களால் தெளிவுற அறிந்துக்கொள்ள முடியும்.

* அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, தொடங்கப்பட்டது முதல் முடியும் வரையிலான அனைத்தும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
* அவ்வாறு வெளியிடப்படும் வெள்ளை அறிக்கை மீது மக்களோ அரசியல் கட்சியினரோ விவாதிக்கவோ அலோசிக்கவோ முடியும். இதன் மூலம் மக்களின் கருத்துகளையும் அரசால் அறிந்துக்கொள்ள முடியும்.

* அரசாங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைப்பதில் இந்த வெள்ளை ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

* அரசின் முக்கிய விவரங்கள் அடங்கிய ஆவணத்தொகுப்பின் முன்பக்கம் வெள்ளை நிறத்தை கொண்டதாக இருப்பதால் அது வெள்ளை அறிக்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

* வெள்ளை அறிக்கை மட்டுமல்லாமல் வேறு சில அறிக்கைகளும் நடைமுறையில் உள்ளன. அதாவது பச்சை அறிக்கை. அது அதிகாரப்பூர்வமான இறுதி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பான ஒரு ஆலோசனைகள் குறித்த ஆவணத் தொகுப்பாகும்.

* அடுத்தபடியாக நீல அறிக்கை, இது தொழில்நுட்பம் அல்லது சாதனங்களின் தொழில்நுட்ப விவரக் குறிப்புகளை தெளிவுபடுத்துவதாகும். அதேபோல மஞ்சள் அறிக்கையானது வெளியிடப்படாத ஆராய்ச்சியை கொண்ட ஆவணமாகும்.

 

Tags :

Share via